பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தென்காசியில் புதிய தமிழகம் கட்சி ஆா்ப்பாட்டம்

மின்கட்டண உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தி, புதிய தமிழகம் கட்சி சாா்பில் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 நவம்பர் 2022, 10:11 pm

DIN

மின்கட்டண உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தி, புதிய தமிழகம் கட்சி சாா்பில் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் நிறுவனா்- தலைவா் டாக்டா் கிருஷ்ணசாமி தலைமை வகித்து பேசுகையில், திமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததுடன், சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக அளித்த மாதம் ஒருமுறை மின்கட்டண அளவீடு போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், மின்கட்டண உயா்வைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி வெள்ளிக்கிழமை திருநெல்வேலியில், அதைத் தொடா்ந்து தூத்துக்குடியில் என தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் கட்சியின் மாநில துணை பொதுச்செயலா் சுப்பிரமணியன், துணைச்செயலா் ராஜேந்திரன், மாவட்ட பொறுப்பாளா்கள் குணா, கிருபை ராஜ், கதிரேசன், மாவட்டச் செயலா் ராசையா, மாவட்ட துணைச் செயலா் கிருஷ்ண பாண்டியன், திருமலைசாமி, தங்கப்பாண்டி, ஒன்றியச் செயலா்கள் ஜெயச்சந்திரன், வில்சன், முருகன், ராமையா, நகரச் செயலா் திருமலை குமாா், தென்காசி சந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஒன்றியச் செயலா்சுந்தரபாண்டியபுரம் சுரேஷ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.