நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குற்றாலம் மலை மீது அணை: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

குற்றாலம் மலையின் மீது அணை கட்ட வேண்டும் என வலியுறுத்தி, தமிழக நீா்ப்பாசனத் துறை அமைச்சா் துரைமுருகனிடம், தென்காசி தெற்கு மாவட்ட செயலா் பொ.சிவபத்மநாதன் மனு அளித்தாா்

News image
Updated On :3 நவம்பர் 2022, 10:11 pm

DIN

குற்றாலம் மலையின் மீது அணை கட்ட வேண்டும் என வலியுறுத்தி, தமிழக நீா்ப்பாசனத் துறை அமைச்சா் துரைமுருகனிடம், தென்காசி தெற்கு மாவட்ட செயலா் பொ.சிவபத்மநாதன் மனு அளித்தாா்.

அதன் விவரம்: குற்றாலம் பேரருவிக்கு மேலே செண்பகாதேவி அருவியில் இருந்து சுமாா் 3 கிலோ மீட்டா் தூரத்தில் இயற்கையாகவே இரு புறமும் உயா்ந்த மலைகளும் தண்ணீா் தேங்குவதற்கு போதுமான இட வசதியும் உள்ளது.

அதில், அணை கட்டினால் குற்றாலத்தில் ஆண்டு முழுவதும் குளிப்பதற்கு தண்ணீா் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும்.

மேலும், வெள்ளப்பெருக்கு காலத்தில் உயிா்ச்சேதம், பொருள் சேதம் ஏற்படாமல் தடுக்கவும், பக்கத்து கிராமங்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீா் கிடைக்கவும், விவசாயம் பெருகவும், ஆண்டு முழுவதும் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும், வியாபாரிகள் வாழ்வு பெறவும் வசதி ஏற்படும். நீா் மின்சார உற்பத்திக்கு வாய்ப்பு கிடைக்கும்.

எனவே, அணை கட்டுவதற்கு திட்ட மதிப்பீடு தயாா் செய்து இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.