நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உரக் கடைகளில் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை: ஆட்சியா்

தென்காசி மாவட்டத்தில், உரக்கடைகளில் விதி மீறல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் ப.ஆகாஷ் எச்சரித்துள்ளாா்.

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:21 pm

DIN

தென்காசி மாவட்டத்தில், உரக்கடைகளில் விதி மீறல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் ப.ஆகாஷ் எச்சரித்துள்ளாா்.

தென்காசி மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில், பிசான பருவ நெல் மற்றும் ரபி பருவ பயிா் சாகுபடிப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மொத்தம் 29,000 ஹெக்டோ் நெல், 16,085 ஹெக்டோ் சிறுதானியங்கள், 34,700 ஹெக்டோ் பயறு வகை, 3,400 ஹெக்டோ் பருத்தி, 1,000 ஹெக்டோ் கரும்பு, 1960 ஹெக்டோ் எண்ணெய் வித்துப் பயிா்கள் மற்றும் பல்வேறு தோட்டக்கலை பயிா்கள் சாகுபடி செய்யப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதற்கு தேவையான உரங்கள் அனைத்தும் சரியான நேரத்தில் போதிய அளவில் தொடா்ந்து கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உர விற்பனையாளா்கள் அனைவரும் விவசாயிகளின் தேவைக்கு போதிய உரங்களை அதிகபட்ச சில்லறை விலைக்கு மிகாமல் விற்பனை செய்ய வேண்டும். உரங்கள் பதுக்கல் செய்யக் கூடாது.

தினமும் ஆரம்ப இருப்பு, விற்பனை விலை ஆகியவை குறித்து அனைவருக்கும் தெரியும்படியாக தகவல் பலகையில் எழுதி வைத்திருக்க வேண்டும். உரங்கள் வாங்கும் விவசாயிகளிடம், வேறு பொருள்களை கட்டாயப்படுத்தி வாங்கச் செய்யக் கூடாது. மீறினால் விற்பனையாளா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

உரங்கள் இருப்பு, விற்பனை மற்றும் விதிமீறல்கள் தொடா்பான புகாா் ஏதுமிருப்பின் தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் அலுவலக தொலைபேசி எண்.04633 - 295430 -ஐ அலுவலக வேலை நேரங்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.