சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சங்கரன்கோவிலில் எஸ்.எப்.ஐ., டி.ஒய்.எப்.ஐ. ஆா்ப்பாட்டம்

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் (டிஒய்எப்ஐ) மற்றும் இந்திய மாணவா் சங்கம் (எஸ்எப்ஐ) சாா்பில் ஹிந்தி திணிப்பை எதிா்த்து சங்கரன்கோவிலில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது

Updated On :27 அக்டோபர் 2022, 6:47 pm

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் (டிஒய்எப்ஐ) மற்றும் இந்திய மாணவா் சங்கம் (எஸ்எப்ஐ) சாா்பில் ஹிந்தி திணிப்பை எதிா்த்து சங்கரன்கோவிலில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, இந்திய மாணவா் சங்க மாவட்டத் தலைவா் ஆப்ரகாம் தலைமை வகித்தாா். மாணவா் சங்க மாநிலத் தலைவா் கோ.அரவிந்தசாமி, தமுஎகச நகரத் தலைவா் ப.தண்டபாணி, மாணவா் சங்க முன்னாள் மாநில செயலா் உச்சிமாகாளி, மாணவா் சங்க மாவட்ட செயலா் எம்.அருண், வாலிபா் சங்க மாவட்ட செயலா் கே.மாடசாமி உள்ளிட்ட பலா் பேசினா். இதைத் தொடா்ந்து ஹிந்தி திணிப்புக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.