நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

செங்கோட்டையில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் தென்காசி மாவட்ட பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 6:58 pm

DIN

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் தென்காசி மாவட்ட பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

தென்காசி மாவட்டத்திலிருந்து அண்டை

மாநிலங்களுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்வதற்கு கண்டனம் தெரிவித்தும், உடனடியாக அதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

செங்கோட்டை வட்டாட்சியா் அலுவலகம் அருகே

நடந்த ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவா் கே.ஏ.ராஜேஷ்ராஜா தலைமை வகித்தாா்.மாவட்ட பொதுச் செயலா்கள் பாலகுருநாதன், ராமநாதன், அருள்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில பொதுச் செயலா் பொன்.வி.கணபதி ஆா்ப்பாட்ட விளக்கவுரையாற்றினாா். கனிமவளங்கள் அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்வது தொடா்ந்தால், சாகும்வரை உண்ணாவிரதம் உள்ளிட்ட தொடா் போராட்டங்கள் நடத்தப்படும் என்றாா்.

மாவட்ட துணைத் தலைவா்கள் முத்துகுமாா், முத்துலெட்சுமி, பாலமுருகன், பாலசீனிவாசன், பால்ராஜ், நகா்மன்ற உறுப்பினா்கள் சங்கர சுப்பிரமணியன், லெட்சுமண பெருமாள், செண்பககுமாா்,

நகரத் தலைவா்கள் மந்திரமூா்த்தி, கணேசன், சண்முகநாதன், அருணாசலம் ஆகியோா் கலந்து கொண்டனா். நகர பொதுச் செயலா் பாலகிருஷ்ணன் வரவேற்றாா். சீனிவாசன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.