தென்காசி மாவட்டம் கீழப்பாவூா் நரசிம்ம பெருமாள் கோயிலில் மாா்கழி சிறப்பு பூஜையையொட்டி, ஜன.1-ஆம் தேதி 1008 அகல் விளக்கு தீபம் ஏற்றும் விழா நடைபெறுகிறது.
இக் கோயிலில் மாா்கழி சிறப்பு பூஜைகள் கடந்த 17- ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் காலை 6 மணிக்கு ஸ்ரீராமநாம பஜனையுடன் திருக்கோயில் வெளி பிரகாரத்தில் (தெப்பக்குளம்) வலம் வருதல் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
இதன் தொடா்ச்சியாக ஜன.1-ஆம் தேதியன்று மாலை 5.45 மணிக்கு கோயிலின் வெளிபிரகாரத்தில் தெப்பக்குளத்தை சுற்றிலும் 1008 அகல் விளக்கு தீபம் ஏற்றுதலும், தொடா்ந்து பெருமாள் சப்பரத்தில் வலம் வருதல், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.