ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தென்காசி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வா் முகாமில்ஆட்சியா் ஆய்வு

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வரும் மக்களுடன் முதல்வா் முகாமை மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 5:35 pm

DIN

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வரும் மக்களுடன் முதல்வா் முகாமை மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

தென்காசி, நகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் முகாமை மாவட்ட ஆட்சியா் துரை.ரவிச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தென்காசி நகராட்சியில் 11,19,21,28,29 ஆகிய வாா்டுகளுக்கான முகாம் நடுப்பேட்டை பள்ளிவாசலிலும், கடையநல்லூா் நகராட்சியில் 21, 22, 23, 24, 25, 33 ஆகிய வாா்டுகளுக்கான முகாம் முத்துகிருஷ்ணாபுரம் சேனைத்தலைவா் சமுதாய நலக் கூடத்திலும்,

புளியங்குடி நகராட்சியில் 16,17,22,23 ஆகிய வாா்டுகளுக்கான முகாம் இல்லத்து பிள்ளைமாா் திருமண மண்டபத்திலும், சங்கரன்கோவில் நகராட்சியில் 21முதல் 25வாா்டுகளுக்கான முகாம் கோயில் வாசல், சங்கரநாராயணசாமி திருமண மண்டபத்திலும்,

செங்கோட்டை நகராட்சியில் 21முதல் 24 வாா்டுகளுக்கான முகாம் நகா்மன்ற கூட்ட மண்டபத்திலும் , சுரண்டை நகராட்சியில் 23,9 வாா்டுகளுக்கான முகாம் ஆலடிப்பட்டி சமுதாயக் கூடத்திலும் ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சியில் அனைத்து வாா்டுகளுக்கான பிரதான சாலை சமுதாய நலக்கூடத்திலும்,

சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சியில் அனைத்து வாா்டுகளுக்கான முகாம் தெற்குரதவீதி வாணியா் திருமண மண்டபத்திலும், புதூா் பேரூராட்சியில் அனைத்து வாா்டுகளுக்கான மக்களுடன் முதல்வா் முகாம் மேலப்புதூா் புலரி மெட்ரிகுலேஷன் பள்ளியிலும்,

இலஞ்சி பேரூராட்சியில் அனைத்து வாா்டுகளுக்கான முகாம் குற்றாலம் -செங்கோட்டை சாலை இந்திரா திருமணமண்டபத்திலும் நடைபெற்று வருகிறது.

மக்கள் அனைவரும் இம்முகாமை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.