பாவூர்சத்திரம் சந்தையில் ஆடு, மாடுகள் விற்பனை அமோகம்

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அரசு சந்தையில் பொங்கல் பண்டிகையையொட்டி ஆடு,மாடுகள் விற்பனை வியாழக்கிழமை அமோகமாக நடைபெற்றது.
பாவூர்சத்திரம் சந்தையில் ஆடு, மாடுகள் விற்பனை அமோகம்

பாவூர்சத்திரம்: தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அரசு சந்தையில் பொங்கல் பண்டிகையையொட்டி ஆடு, மாடுகள் விற்பனை வியாழக்கிழமை அமோகமாக நடைபெற்றது.

பாவூர்சத்திரம் பழைய காய்கனி சந்தையில் வியாழக்கிழமை தோறும் ஆடு, மாடு சந்தை செயல்பட்டு வருகின்றது. தென்காசி மட்டுமின்றி திருநெல்வேலி, தூது;துக்குடி, விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் கேரள பகுதிகளில் இருந்து வியாபாரிகள் இச்சந்தைக்கு வந்திருந்து ஆடு, மாடுகளை வாங்கிச்செல்வர்.

இதனிடையே பொங்கல் பண்டிகையையொட்டி வியாழக்கிழமை (ஜன.12) நடைபெற்ற இச்சந்தையில் காலையிலே விவசாயிகள், வியாபாரிகள்  ஏராளமான ஆடுகள், மாடுகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். அவற்றை இறைச்சி கடைக்காரர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் போட்டி போட்டி வாங்கி சென்றனர். இதனால் சந்தையில் கூட்டம் அலைமோதியது.

ஆடுகளின் தரத்தை பொருத்து ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையும், மாடுகள் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் நாட்டு கோழிகள் விற்பனையும் அதிகளவு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com