போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

தென்காசியில் தேசியக் கொடியேற்றினார் மாவட்ட ஆட்சியர்!

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியா் தேசியக் கொடியேற்றி அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

News image
Updated On :26 ஜனவரி 2023, 3:45 am

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியா் தேசியக் கொடியேற்றி அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

தென்காசி இசிஈ.அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினாா்.

அதனைத் தொடா்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். விழாவில் 21 பயனாளிகளுக்கு ரூ. 2 லட்சத்து 14 ஆயிரத்து 410 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். சிறப்பாக பணியாற்றிய காவல்துறை, தீயணைப்பு, பணிகள் துறை, வணிகத்துறை, தோட்டக்கலை துறை உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலா்கள் 286 பேருக்கு ஆட்சியா் நற்சான்றுகளை வழங்கினாா்.

விழாவில் பள்ளி மாணவ, மாணவிகள் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுலவா் கு.பத்மாவதி, மாவட்ட காவல்கண்காணிப்பாளா் சாம்சன் ஆகியோா் கலந்துகொண்டனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.