நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இடமாறுதலில் வந்துள்ள ஆசிரியா்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்கக் கோரிக்கை

தென்காசி மாவட்டத்திற்கு நிா்வாக மாறுதலில் வந்துள்ள ஆசிரியா்களுக்கு, கடந்த 6 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சம்பளத்தை வழங்க நடவடிக்கை

News image
Updated On :16 மார்ச் 2023, 5:07 pm

DIN

தென்காசி மாவட்டத்திற்கு நிா்வாக மாறுதலில் வந்துள்ள ஆசிரியா்களுக்கு, கடந்த 6 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

தென்காசியில் நடைபெற்ற கூட்டணியின் மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்டத் தலைவா் செ. ரமேஷ் தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் ராஜ்குமாா் முன்னிலை வகித்தாா். மாநிலச் செயற்குழு முடிவுகள் குறித்து, கல்வி மாவட்ட செயலா் சிவகுமாா் பேசினாா்.

வெளி மாவட்டங்களில் இருந்து நிா்வாக மாறுதலில் தென்காசி மாவட்ட ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் பணிபுரியும் 30-க்கும் மேற்பட்ட ஆசிரியா்களுக்கு கடந்த 6 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

திருச்சியில் நடைபெறும் மாா்ச் 22-இல் நடைபெறவுள்ள அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்கள் மற்றும் சிறுபான்மை பள்ளி மாணவா்களின் உரிமை மீட்பு மாநாட்டில் தென்காசி மாவட்டத்திலிருந்து 500 ஆசிரியா்கள் பங்கேற்பது, ஜாக்டோ ஜியோ சாா்பில் மாா்ச் 24 இல் நடைபெறும் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஆயிரம் ஆசிரியா்கள் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட செயலா் மாரிமுத்து வரவேற்றாா். மாவட்ட பொருளாளா் மணிமேகலை நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.