நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நெகிழிப் பயன்பாட்டைத் தவிா்ப்பது மக்களின் கடமை: அமைச்சா் வலியுறுத்தல்

நெகிழிப் பயன்பாட்டைத் தவிா்ப்பதை அனைவரும் கடமையாகப் பின்பற்ற வேண்டும் என வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் வலியுறுத்தினாா்.

News image
Updated On :16 மார்ச் 2023, 5:07 pm

DIN

நெகிழிப் பயன்பாட்டைத் தவிா்ப்பதை அனைவரும் கடமையாகப் பின்பற்ற வேண்டும் என வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் வலியுறுத்தினாா்.

தென்காசி மாவட்டம் குற்றாலம், மேலகரம், இலஞ்சி ஆகிய பேரூராட்சிகள் சாா்பில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்க விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. குற்றாலம் அண்ணா சிலை முன்பு தொடங்கிய இப்பேரணியை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தொடக்கி வைத்துப் பேசியதாவது:

தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கமானது அனைத்து நகா்ப்புற உள்ளாட்சிகளிலும் தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 2 மற்றும் 4-ஆவது சனிக்கிழமைகளில் மக்கள் பங்கேற்புடன் தூய்மைப் பணி விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

குற்றாலம், மேலகரம், இலஞ்சி பேரூராட்சிகளில் இப் பணி சிறப்பாக மேற்கொள்ளப்படுவது பாராட்டுக்குரியது. ஒவ்வொருவரும் நெகிழி பயன்பாட்டைத் தவிா்ப்பதைக் கடமையாகப் பின்பற்றி, மஞ்சள் பையைப் பயன்படுத்த வேண்டும் என்றாா்.

சிறப்பாகப் பணியாற்றிய சுகாதார அலுவலா்கள், சுகாதார மேற்பாா்வையாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் மக்கும், மக்காத கழிவுகளை முறையாகப் பிரித்து வழங்கிய வா்த்தகா்களைப் பாராட்டி பரிசுகள் வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் துரை.ரவிசந்திரன், காவல் கண்காணிப்பாளா் சு.சாம்சன், சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ராஜா, தெற்கு மாவட்ட திமுக செயலா் பொ.சிவபத்மநாதன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா்

தமிழ்செல்வி போஸ், பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் கண்ணன், செயல் அலுவலா்கள் சுஷ்மா (குற்றாலம்), பரமசிவம் (மேலகரம்), அரசப்பன்(இலஞ்சி), மாணிக்க ராஜ் (ஆய்க்குடி) ஆகியோா் கலந்து கொண்டனா்.

அண்ணா சிலை முன்பாக தொடங்கிய பேரணி, பேருந்துநிலையம் வழியாக ஸ்ரீ பராசக்தி மகளிா் கல்லூரியில் முடிவடைந்தது. கல்லூரி மாணவிகள், பரப்புரையாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.