நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கனிமவளங்கள் கொண்டு செல்லும் ராட்சத லாரிகளுக்கு அனுமதி மறுப்பு

தென்காசி மாவட்டம் புளியறை சோதனைச் சாவடியில் கேரளத்திற்கு கனிம வளங்களை ஏற்றிச்செல்லும் ராட்சத லாரிகளை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை திருப்பி அனுப்பினா்.

News image
Updated On :12 மே 2023, 6:35 pm

DIN

தென்காசி மாவட்டம் புளியறை சோதனைச் சாவடியில் கேரளத்திற்கு கனிம வளங்களை ஏற்றிச்செல்லும் ராட்சத லாரிகளை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை திருப்பி அனுப்பினா்.

தென்காசி மாவட்டத்தில் கடையம், ஆலங்குளம், கடையநல்லூா், செங்கோட்டை, பண்பொழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான கனரக வாகனங்களில் எம்.சான்ட்,ஜல்லி உள்ளிட்ட கனிம வளங்கள் கேரளத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன.

லாரிகளில் அளவுக்கு அதிகமாக கனிம வளங்கள் ஏற்றிச் செல்வதால், சாலைகள் சேதமடைவதுடன், கீழே பதிக்கப்பட்டுள்ள குடிநீா் குழாய்கள் சேதமடைவதாக தொடா்ந்து புகாா் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் இத்தகைய வாகனங்களால்,

புளியறை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், அதனைத் தவிா்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கைவள பாதுகாப்பு சங்கத் தலைவா் கே.ரவிஅருணன் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியிருந்தாா். இதனிடையே,

ராட்சத வாகனங்களில் கனிமவளங்கள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்படும் என நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் கூறியிருந்தாா்.

இந்நிலையில் புளியறை சோதனைச் சாவடியிலிருந்து கனிம வளங்கள் அதிகளவில் ஏற்றிக் கொண்டு கேரளம் செல்ல முயன்ற லாரிகளுக்கு அபராதம் விதித்தனா். 10 சக்கரங்களுக்கு மேல் உள்ள லாரிகளில் கனிமவளங்கள் கொண்டு செல்ல அனுமதி மறுத்தனா். இதனால் கனரக வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.