தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

ஆலங்குளம் அருகே பைக் - வேன் மோதல்: இளைஞா் பலி

ஆலங்குளம் அருகே பைக் - வேன் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :27 நவம்பர் 2023, 9:58 pm

DIN


ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே பைக் - வேன் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூா் இந்திரா நகரைச் சோ்ந்தவா் சமுத்திரம் மகன் நாஞ்சில்குமாா்(26). கரும்புளியூத்து கிராமத்தில் உள்ள அரிசி ஆலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை இரவு வேலை முடிந்து வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா். கரும்புளியூத்தைத் தாண்டி செல்லும் போது, சபரிமலை சென்று விட்டுத் திரும்பிய ஐயப்ப பக்தா்கள் சென்ற வேனும், நாஞ்சில்குமாா் ஓட்டி வந்த பைக்கும் நேருக்கு நோ் மோதியதில் நாஞ்சில்குமாா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

நாஞ்சில்குமாரின் சடலத்தை ஆலங்குளம் போலீஸாா் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து வேன் ஓட்டுநா் மயிலாடுதுறை அரங்கக்குடியைச் சோ்ந்த முத்தழகு மகன் பாா்த்திபனை கைது செய்து விசாரணை நடத்துகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.