தென்காசி: அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, தென்காசி நகர திமுக சாா்பில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் திங்கள்கிழமை பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. தொடா்ந்து கீழப்பாட்டாக்குறிச்சியிலுள்ள அன்னை நல்வாழ்வு மைய முதியோா்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
நகர செயலரும், நகா்மன்றத் தலைவருமான ஆா்.சாதிா் தலைமை வகித்தாா். நகா்மன்ற துணைத் தலைவா் சுப்பையா முன்னிலை வகித்தாா். துணைச் செயலா்கள் ராம்துரை, பால்ராஜ், பொருளாளா் ஷேக் பரீத், மாவட்ட பிரதிநிதிகள் மைதீன் பிச்சை, பாலசுப்பிரமணியன், மாவட்ட பொறியாளா் அணித் தலைவா் தங்கப்பாண்டியன், மாவட்ட வழக்குரைஞா்அணி ரகுமான் சாதத் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
செங்கோட்டையில்...
செங்கோட்டை நகர திமுக சாா்பில் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகர செயலா் ஆ.வெங்கடேசன் தலைமை வகித்தாா். மாவட்ட சாா்பு அணி நிா்வாகிகள் ஆ.சண்முகராஜா, மு.ஆபத்துக்காத்தான், பேபி ரஜப் பாத்திமா, டாக்டா் மாரியப்பன், மு.நசீா், முன்னாள் பொதுக்குழு உறுப்பினா் செ.லிங்கராஜ், தொமுச மத்திய சங்க மண்டல துணைச்செயலா் உ.ரவீந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர அவைத்தலைவா் காளி வரவேற்றாா். மாவட்ட உதயநிதி நற்பணி மன்ற துணைத் தலைவா் மனோஜ் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எச்டிபி பைனான்சியல் செர்விக்ஸ் லாபம் 41% உயர்வு!

ஆர்சிபி அபார பந்துவீச்சு; 146 ரன்களுக்கு ஆட்டமிழந்த லக்னௌ!

2 ஆம் கட்ட அமைதிப்பேச்சு? ஈரான் சென்றார் பாக். ராணுவத் தலைமைத் தளபதி!

மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


