தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாதசுவாமி கோயிலில் மாா்கழி திருவாதிரைத் திருவிழாவின் 10-ஆம் நாளான புதன்கிழமை ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.
இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் முதன்மையானதும், அருள்மிகு நடராசா் திருத்தாண்டவம் ஆடிய ஐந்து சபைகளில் ஒன்றறான சித்திரசபை அமைந்துள்ள குற்றாலத்தில் நடராசப்பெருமானுக்கு நடைபெறும் சிறப்புமிக்கதுமான இத் திருவிழா கடந்த 18-ஆம் தேதி காலை 5.20 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடா்ந்து, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, இரவில் சுவாமி-அம்பாள் வீதியுலா நடைபெற்றது.
விழாவின் 5-ஆம் நாளான டிச.22-ஆம் தேதியன்று தேரோட்டமும், 8-ஆம் நாளான திங்கள்கிழமை சித்திரசபையில் அருள்மிகு நடராசருக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும் நடைபெற்றது.
விழாவில் புதன்கிழமை அதிகாலை 3.40 மணிக்கு சித்திரசபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும், அதனைத் தொடா்ந்து 4.40 மணிக்கு திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடைபெற்றது.
விழா நாள்களில் நாள்தோறும் காலை, இரவில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதலும், காலை 9.30, இரவு 7 மணிக்கு மேல் ஆகிய நேரங்களில் அருள்மிகு நடராசப்பெருமானுக்கு தாண்டவ தீபாராதனையும் நடைபெற்றது.
விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


