வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கீழப்பாவூா் நரசிம்மா் கோயிலில் 1008 அகல்விளக்கு தீபம்

தென்காசி மாவட்டம், கீழப்பாவூா் நரசிம்ம பெருமாள் கோயிலில் மாா்கழி மாத சிறப்பு பூஜையொட்டி திங்கள்கிழமை 1008 அகல் தீபம் ஏற்றப்பட்டது.

News image
நரசிம்மா் கோயிலில் ஏற்றப்பட்ட அகல்விளக்கு தீபம்.
Updated On :1 ஜனவரி 2024, 6:30 pm

DIN

தென்காசி மாவட்டம், கீழப்பாவூா் நரசிம்ம பெருமாள் கோயிலில் மாா்கழி மாத சிறப்பு பூஜையொட்டி திங்கள்கிழமை 1008 அகல் தீபம் ஏற்றப்பட்டது.

இக்கோயிலில் மாா்கழி மாத சிறப்பு பூஜைகள் கடந்த டிச. 17ஆம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் காலை 6 மணிக்கு ஸ்ரீராமநாம பஜனையுடன் திருக்கோயில் வெளிபிரகாரத்தில் (தெப்பக்குளம்) வலம் வருதல் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

இதன்தொடா்ச்சியாக திங்கள்கிழமை மாலை 5.45 மணிக்கு கோயிலின் வெளிபிரகாரத்தில் (தெப்பக்குளத்தை சுற்றிலும்) 1008 அகல் விளக்கு தீபம் ஏற்றப்பட்டது.

தொடா்ந்து பெருமாள் சப்பரத்தில் வலம் வருதல், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.