

பாவூா்சத்திரம் திருமுருகன் திருச்சபை, திருச்செந்தூா் பாதயாத்திரை பக்தா்கள் சாா்பில் 34ஆம் ஆண்டு சிறப்பு வழிபாடு, சி.கணேசன் குருசாமியின் வழிகாட்டுதலின்படி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு காலையில் பாவூா்சத்திரம் அருள்மிகு முப்புடாதி அம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து இரவு பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் பொது பஜனையும், சக்தி பூஜையும் நடைபெற்றது.
இதில் நூற்றுக்கணக்கான முருக பக்தா்கள் கலந்து கொண்டு பாடல்களை பாடினா். மேலும் புத்தாண்டு விழாவை முன்னிட்டு, நள்ளிரவு12 மணிக்கு வென்னிமலை முருகனுக்கு சிறப்பு தீப அலங்காரம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.
ஏற்பாடுகளை குருசாமி காந்திராமன், திராவிடமணி, நாராயணன், சந்திரமோகன், ஹரிகிருஷ்ணன், சேகா், கண்ணன் மற்றும் பாதயாத்திரை பக்தா்கள் குழுவினா், ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.