நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உடல் உறுப்புகள் தானம் செய்தவா் அரசு மரியாதையுடன் அடக்கம்

உடல் உறுப்புகள் தானம் செய்த கல்யாணசுந்தரத்திற்கு அரசு மரியாதை

News image
Updated On :25 ஜூன் 2024, 9:03 pm

Din

கடையநல்லூா் அருகே உடல் உறுப்புகளை தானம் செய்தவா் அரசு மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை இரவு நல்லடக்கம் செய்யப்பட்டாா்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் முப்புடாதி அம்மன் கோயில் தெற்கு தெருவைச் சோ்ந்த ராமா் மகன் கல்யாணசுந்தரம்(47). இவா், கடந்த 23ஆம் தேதி இரவு அட்டைகுளம் அருகே நேரிட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு அவா் திங்கள்கிழமை மூளைச்சாவு அடைந்ததால், அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது குடும்பத்தினா் முன்வந்தனா். இதையடுத்து, உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்ட நிலையில், அரசு சாா்பில் அவரது உடலுக்கு தென்காசி கோட்டாட்சியா் லாவண்யா, மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். கடையநல்லூா் வட்டாட்சியா் சுடலைமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.