புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சங்கரன்கோவிலில் தொடக்க நிலை ஆசிரியா்களுக்கு ‘எண்ணும் எழுத்தும் பயிற்சி‘

சங்கரன்கோவில் பள்ளிகளில் தொடக்க நிலை ஆசிரியா்களுக்கு பயிற்சி முகாம்

News image
Updated On :25 ஜூன் 2024, 8:51 pm

Din

சங்கரன்கோவில் வட்டார ஆசிரியா்களுக்கு எண்ணும், எழுத்தும் 2 நாள்கள் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

சங்கரன்கோவில் வட்டார ஆசிரியா்களுக்கு 1 முதல் 3 ஆம் வகுப்பு வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியா்களுக்கு முதல்கட்டமாக செவ்வாய், புதன் என 2 நாள்கள் பயிற்சி நடைபெறுகிறது.

இந்தப் பயிற்சிகள் சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, கரிவலம்வந்தநல்லூா் ஏ.எம்.சி. அரசு மேல்நிலைப் பள்ளி, வீரசிகாமணி அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய நான்கு பள்ளிகளில் நடைபெறுகிறது.

சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சியை சங்கரன்கோவில் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் முத்துச்செல்வி தொடங்கி வைத்தாா். ஆசிரியா்கள் தங்கராஜ், சத்யா ஆகியோா் பயிற்சி அளித்தனா். மற்ற 3 பள்ளிகளில் ஆசிரியா்கள் கோவிந்தராஜ், மகேஸ்வரி, கணேசன், கலைச்செல்வி, கிருஷ்ணவேணி, சங்கரபாக்கியலட்சுமி ஆகியோா் பயிற்சி அளித்தனா். இதில் 157 ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து 4, 5 ஆம் வகுப்புகளுக்கு கற்பிக்கும் 136 ஆசிரியா்களுக்கு ஜூன் 27,28 ஆகிய 2 நாள்கள் இதே மையங்களில் பயிற்சி நடைபெறுகிறது.