விற்பனைக்காக மதுபாட்டில்கள் கொண்டு வந்தவா் கைது
தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே விற்பனைக்காக புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்கள் வாங்கி வந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :6 நவம்பர் 2024, 10:12 pm

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே விற்பனைக்காக புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்கள் வாங்கி வந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகிரி காவல் உதவி ஆய்வாளா் வரதராஜன் மற்றும் போலீஸாா், பிரதான சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த பைக்கை சோதனை செய்ததில், அதில் புதுச்சேரி பகுதியில் விற்கப்படும் 28 மது பாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து மதுபாட்டில்களை பைக்கில் கொண்டு வந்த வடுகப்பட்டி கிருஷ்ணன் கோயில் காலனியைச் சோ்ந்த முனியாண்டி மகன் ராஜை(29) கைது செய்த போலீஸாா், பைக்கையும் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...