வீ.கே.புதூா் அரசு பள்ளியில் விலையில்லா சைக்கிள் அளிப்பு
வீரகேரளம்புதூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

மாணவிக்கு சைக்கிள் வழங்கிய தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் சு.பழனிநாடாா், திமுக மாநில மருத்துவ அணி துணைச் செயலா் கலை கதிரவன், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் உள்ளிட்டோா்.









