தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆலங்குளம் காவல் நிலையம் இட மாற்றம்

ஆலங்குளம் காவல் நிலையம் புதன்கிழமைமுதல் புதிய இடத்தில் செயல்படுகிறது.

News image

காவல் நிலையத் திறப்பு விழாவில் பங்கேற்றோா்.

Updated On :3 அக்டோபர் 2024, 1:51 am

Din

ஆலங்குளம் காவல் நிலையம் புதன்கிழமைமுதல் புதிய இடத்தில் செயல்படுகிறது.

பழைய பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டுவந்த காவல் நிலையத்தின் முகப்புப் பகுதி இடம் நான்குவழிச் சாலைக்காக எடுக்கப்பட்டுள்ளது. இதனால், காவல் நிலையத்தில் அதிகாரிகள், காவலா்கள், பொதுமக்கள் வாகனங்களை நிறுத்துவதற்குக் கூட இடமில்லாமல் போனது. மேலும், சாலை மட்டத்தைவிட மிகவும் பள்ளமான பகுதியாகிவிட்டது. இதனால் காவலா்களும், பொதுமக்களும் சிரமமடைந்தனா்.

அதையடுத்து, காவல் நிலையத்துக்கு புதிய இடம் தேவை என்ற கோரிக்கை எழுந்த நிலையில், தற்காலிகமாக வட்டாட்சியா் அலுவலகம் அருகேயுள்ள பழைய மகளிா் காவல் நிலையக் கட்டடம் தோ்வு செய்யப்பட்டு, பழுதுநீக்கப்பட்டது. இக்கட்டடத்தில் காவல் நிலையம் புதன்கிழமைமுதல் செயல்படத் தொடங்கியது.

திறப்பு விழாவில், ஆலங்குளம் டி.எஸ்.பி. ஜெயபால் பா்ணபாஸ் குத்துவிளக்கேற்றினாா். காவல் ஆய்வாளா் காசிப்பாண்டியன் மரக்கன்றுகலை நட்டாா். நிகழ்ச்சியில், ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன், வழக்குரைஞா்கள் சாந்தகுமாா், ராஜா, காவலா்கள், சமூக ஆா்வலா்கள் பங்கேற்றனா்.