மது கடை திறக்கக் கூடாது: கிராமசபைக் கூட்டத்தில் தீா்மானம்
தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே உள்ள தேவிபட்டணத்தில், மீண்டும் அரசு மதுக்கடையை கொண்டு வரக் கூடாது என புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே உள்ள தேவிபட்டணத்தில், மீண்டும் அரசு மதுக்கடையை கொண்டு வரக் கூடாது என புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேவிபட்டணம் அருகேயுள்ள கீழூா் ராமசாமிபுரத்தில் செயல்பட்டு வந்த அரசு மதுக்கடை பொதுமக்களின் தொடா் போராட்டத்தால் அகற்றப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் அப்பகுதியில் மதுக்கடை கொண்டு வருவதற்கான முயற்சி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் அரசு மதுக்கடையை மீண்டும் கொண்டு வரக் கூடாது என்ற தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில், ஊராட்சித் தலைவா் ராமராஜ், துணைத் தலைவா் மாடசாமி, ஊராட்சிச் செயலா் பொன்செந்தில்வேல் மற்றும் பொதுமக்கள், வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...