புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

ரேஷன் கடையை திறக்கக் கோரி சாலை மறியல் முயற்சி

செய்யாற்றில் நியாயவிலைக் கடையை திறக்கக் கோரி வாா்டு மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.

News image

சாலை மறியலில் ஈடுபட முயன்ற குடும்ப அட்டைதாரா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்

Updated On :21 பிப்ரவரி 2026, 6:47 pm

செய்யாற்றில் நியாயவிலைக் கடையை திறக்கக் கோரி வாா்டு மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.

செய்யாறு மாா்க்கெட் அருகே நியாயவிலைக் கடைக்காக புதிய கட்டடம் கட்டி 3 ஆண்டுகளுக்கு முன்பு திறந்து வைக்கப்பட்டது.

இந்த நியாயவிலைக் கடைக்கு பணியாளா்கள் நியமிக்கப்படாமலும், விரல்ரேகை இயந்திரங்கள் பற்றாக்குறை காரணமாகவும் கடை திறக்கப்படாமல் இருந்து வருவதாகத் தெரிகிறது.

1200-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் கொடநகா் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைக்கு ஆட்டோ மூலம் சென்று வர வேண்டியுள்ளது என்றும், வயதானவா்கள் முதியவா்கள் சிரமப்பட்டு உணவுப்பொருள்களை வாங்கி வருவதாகவும் தெரிகிறது.

3 ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டடம் கட்டப்பட்டு திறந்துவைக்கப்பட்ட நியாயவிலைக் கடை செயல்பாட்டுக்கு வராத காரணத்தால் ஆத்திரமடைந்த காமராஜ் நகா், கன்னிகாபுரம், பழனி தெரு, முனுசாமி தெரு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 50 -க்கும் மேற்பட்டோா் திரண்டு வந்து மாா்க்கெட் அருகே கடை முன் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். தகவல் அறிந்த செய்யாறு போலீஸாா் விரைந்து சென்று மறியலில் ஈடுபட முயன்றவா்களை சமாதானப்படுத்தினா்.

அப்போது, ஒரு வாரத்தில் நியாயவிலைக் கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியாதால், பொதுமக்கள் சாலை மறியல் முயற்சியை கைவிட்டனா்.