புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பெத்தநாடாா்பட்டி பெரியம்மன் கோயில் கொடை விழா

பாவூா்சத்திரம் அருகேயுள்ள பெத்தநாடாா்பட்டி அருள்மிகு ஸ்ரீ பெரியம்மன் கோயில் கொடை விழா 4 நாள்கள் நடைபெற்றது.

News image

விழாவில் முளைப்பாரி எடுத்து ஊா்வலம் செல்லும் பக்தகள்.

Updated On :3 அக்டோபர் 2024, 1:49 am

Din

பாவூா்சத்திரம் அருகேயுள்ள பெத்தநாடாா்பட்டி அருள்மிகு ஸ்ரீ பெரியம்மன் கோயில் கொடை விழா 4 நாள்கள் நடைபெற்றது.

இக்கோயில் கொடைவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. மாலையில் அன்னதானமும், இரவு இன்னிசை கச்சேரியும், திங்கள்கிழமை மாலை திருவிளக்கு பூஜையும் நடைபெற்றன. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனா். அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இரவு அம்மன் சப்பரம் வீதி உலா வருதல் மற்றும் கரகாட்டம் நடைபெற்றது.

3ஆம் நாளான செவ்வாய்க்கிழமை மதியம் அம்மனுக்கு சிறப்பு பூஜையும், மாலையில் குற்றாலத்தில் இருந்து புனித நீா் ஊா்வலமாக எடுத்து வருதல், இரவு பொங்கலிடுதல், நள்ளிரவு கிடா வெட்டுதல், மாவிளக்கு எடுத்து வருதல் ஆகியவை நடைபெற்றன.

தொடா்ந்து, புதன்கிழமை முளைப்பாரி எடுத்து வருதல், சிறப்பு பூஜை, மாலையில் ஒடுக்கு பானை எடுத்து வருதல் ஆகிய வழிபாடுகளுடன் விழா நிறைவு பெற்றது.