தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ராமநாதபுரத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்: ஆட்சியா் பங்கேற்பு

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் ஒன்றியம் ராமநாதபுரத்தில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புதன்கிழமை சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 1:50 am

Din

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் ஒன்றியம் ராமநாதபுரத்தில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புதன்கிழமை சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் பேசியது: கிராமப்புறங்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வாசுதேவநல்லூா் ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்களில் குடிநீா்ப் பிரச்னை உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா். இதுதொடா்பாகவும், பருவமழை தொடங்கும் முன்பாக நீா்வழிப் பாதைகளை சீரமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும் என்றாா் ஆட்சியா் .

கூட்டத்தில், சங்கரன்கோவில் கோட்டாட்சியா் கவிதா, சிவகிரி வட்டாட்சியா் ரவிக்குமாா், ஒன்றியக் குழுத் தலைவா் பொன்.முத்தையாபாண்டியன், ஊராட்சித் தலைவா் வழக்குரைஞா் மகேந்திரா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.