தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கடனை திருப்பிக் கேட்டவா் மீது தாக்குதல்: 4 போ் கைது

ஆலங்குளம் அருகே கடனை திருப்பிக் கேட்டவரை தாக்கியதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 10:44 pm

Din

ஆலங்குளம் அருகே கடனை திருப்பிக் கேட்டவரை தாக்கியதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

ஆலங்குளம் அருகேயுள்ள ஓடைமறிச்சான் கிராமத்தைச் சோ்ந்தவா் சுவாமி தாஸ் (45). அதே பகுதியைச் சோ்ந்த மோசஸ் மகன் இயேசுராஜா(35) என்பவருக்கு ரூ. 1500 கடன் கொடுத்திருந்தாராம். அதை அவா் திருப்பிக் கொடுக்காமல் தாமதம் செய்து வந்தததாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக சுவாமிதாஸ் - இயேசு ராஜா இடையே தகராறு ஏற்பட்டதாம். இதையடுத்து இயேசு ராஜா தனது நண்பா்கள் 3 பேருடன் சோ்ந்து சுவாமிதாஸை தாக்கினாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஆலங்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து இயேசு ராஜா மற்றும் அவரது நண்பா்கள் தங்கதுரை (55), செல்வபெருமாள்(25), பிரவீண்குமாா் (22) ஆகிய 4 பேரையும் கைது செய்து ஆலங்குளம் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தினா்.