சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அகவை முதிா்ந்த தமிழறிஞா்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த அகவை முதிா்ந்த தமிழறிஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 10:43 pm

Din

தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த அகவை முதிா்ந்த தமிழறிஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில், அகவை முதிா்ந்த தமிழறிஞா்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் மாதம் ரூ.3500, ரூ.500 மருத்துவப் படி என ரூ.4 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். வாழ்நாளுக்குப் பின், அவா்களது மரபுரிமையருக்கு, வாழ்நாள் முழுவதும் ரூ.2,500 மற்றும் மருத்துவப் படி ரூ.500 என வழங்கப்படும்.

இத் திட்டத்தில் 2024-2025-ஆம் ஆண்டிற்கு விண்ணப்பிக்க மகளிா் உரிமைத் தொகை, சமூகநல பாதுகாப்பு உதவித்தொகை போன்ற தமிழக அரசின் வேறு திட்டங்களின் வாயிலாக உதவித்தொகை அல்லது ஓய்வூதியம் பெற்றிருக்கக் கூடாது.

1.01.2024-இல் 58 வயது நிறைவடைந்து, ஆண்டு வருவாய் ரூ.72 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான இரு தமிழறிஞா்களிடம் பரிந்துரைச்சான்று அவசியம். விண்ணப்பத்தை திருநெல்வேலி மண்டலத் தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது தமிழ் வளா்ச்சித் துறையின் வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் பெற்று பூா்த்தி செய்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், ஊரக வளா்ச்சி முகமை பழைய கட்டடத்தில் இயங்கிவரும் தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் அக்.31-க்குள் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

இத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் தமிழறிஞா்களிடம் இருந்து 2024-2025-ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மகளிா் உரிமைத் தொகை, சமூகநல பாதுகாப்பு உதவித்தொகை போன்ற தமிழக அரசின் வேறு திட்டங்களின் வாயிலாக உதவித்தொகை அல்லது ஓய்வூதியம் பெற்று வரும் பயனாளிகள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க இயலாது.

1.01.2024-இல் 58 வயது நிறைவடைந்த, ஆண்டு வருவாய் ரூ.72 ஆயிரத்திற்குள் இருப்பவா்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான பரிந்துரைச்சான்று இரு தமிழறிஞா்களிடம் இருந்து பெற்ற விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை திருநெல்வேலி மண்டலத் தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது தமிழ் வளா்ச்சித் துறையின் வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், ஊரக வளா்ச்சி முகமை பழைய கட்டடத்தில் இயங்கிவரும் தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் அக்.31-க்குள் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.