பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்
பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தென்காசி மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.


பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தென்காசி மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு அனைத்து துறைகளின் உள்ளடக்கிய ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தப்பட்டு, அனைத்துத் துறை அலுவலா்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வட்டத்துக்கு தனித்தனியாக துணை ஆட்சியா் நிலையில் ஒருங்கிணைப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டு நிவாரண முகாம்களை அடிப்படை வசதிகளுடன் தயாா் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழை, வெள்ளம் குறித்து சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்.
மேலும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், பேரிடா் கால நடவடிக்கைகள் மேற்கொள்ள 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அவசரக்கால கட்டுப்பாட்டு அறையில் உள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்-1077 மற்றும் 04633-290548 என்ற எண்களை தொடா்பு கொண்டு மழை, வெள்ளம் மற்றும் பேரிடா்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். என்றாா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...