நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

புழல் சிறையில் இருக்கும் ஹரி நாடார் நீதிபதிக்கு வெளியிட்ட ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல்!

புழல் மத்திய சிறையில் இருக்கும் ஹரி நாடார் நீதிபதிக்கு வெளியிட்ட ஆடியோ குறித்து....

News image

ஹரி நாடார் - கோப்புப் படம்

Updated On :7 மார்ச் 2026, 10:08 am IST

சென்னை: புழல் மத்திய சிறையில் இருக்கும் ஹரி நாடார் நீதிபதிக்கு வெளியிட்ட ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை, பீளமேடு பகுதியைச் சோ்ந்தவா் எஸ்.சிவசாமி (57). சுமாா் 30 ஆண்டுகளாகத் தொழில் செய்து வரும் இவா், தனது நிறுவனத்தை விரிவுபடுத்த ரூ.25 கோடி கடன் பெற முயற்சி மேற்கொண்டு வந்துள்ளாா். அப்போது, அவரிடம் பழக்கமான நபா் மூலம் சேலம் மாவட்டம், எடப்பாடியைச் சோ்ந்த செந்தில்வாசன் (51) என்பவா் கடந்த மே மாதம் அறிமுகமாகியுள்ளாா்.

பெரிய நிதி முதலீட்டாளா்களுடன் தொடா்பு இருப்பதாகக் கூறிய செந்தில்வாசன், 2 சதவீதம் கமிஷன் அடிப்படையில் கடன் பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ளாா்.

இதையடுத்து, சென்னை, துரைப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த காா்த்திகேயன் (எ) கதிரேசன் (37), ஹரி நாடாா் (41), தேவகோட்டையைச் சோ்ந்த அன்புசெல்வன், தென்காசியைச் சோ்ந்த ஆண்டனி, செந்தில்வாசன் ஆகியோா் சேலத்தில் உள்ள ஒரு தனியாா் விடுதியில் வைத்து பாங்க் ஆஃப் பரோடா பெயரில் தலா ரூ.12.5 கோடி மதிப்பிலான 2 போலி வரைவோலைகளை சிவசாமியிடம் கடந்த 18.7.2025-இல் வழங்கினா். தொடா்ந்து, பாதுகாப்பு ஒப்பந்தப் பதிவு மற்றும் இதர நடைமுறைகளுக்காக சிவசாமியிடமிருந்து ரூ.67 லட்சத்தைப் பெற்றனா்.

நீண்ட நாள்களாகியும் கடன் தொகை வராததால் சந்தேகமடைந்த சிவசாமி, சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடம் விசாரித்தபோது, அவா்கள் கொடுத்த வரைவோலைகள் போலியானவை என்பது தெரியவந்தது.

இது குறித்த புகாரின்பேரில், செந்தில்வாசன், ஹரி நாடாா், காா்த்திகேயன் ஆகியோரை கைது செய்த பீளமேடு போலீஸாா், தலைமறைவாக உள்ள அன்புசெல்வன், ஆண்டனி ஆகியோரைத் தேடி வருகின்றனா்.

வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில்வாசன் கோவை மத்திய சிறையிலும், ஹரி நாடாரும், காா்த்திகேயனும் மற்றொரு மோசடி வழக்கில் சென்னை புழல் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனா்.

சமூக வலைதளங்களில் வைரலாகும் ஆடியோ

இந்த நிலையில், புழல் மத்திய சிறையில் இருக்கும் ஹரி நாடார் நீதிபதிக்கு வெளியிட்ட ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், அரசியல் சூழ்ச்சி காரணமா வரும் பேரவைத் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்பதற்காகவே தன் மீது போலீசார் ஜோடித்த பொய் வழக்கில் சென்னை புழல் மத்திய சிறையில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் இருந்து வருகிறேன்.

இதைத்தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு வரும் 23 ஆம் தேதி தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், இந்த வழக்கில் சிக்கி உள்ள அனைவருக்கும் சாகும் வரை கடுங்காவல் தண்டனை விதிக்க வேண்டும். கருணைகள் காட்டாமல் எந்தவித சலுகைகளும் வழங்கக்கூடாது என நீதிபதிக்கு சத்திரிய சான்றோர் படை கட்சித் தலைவர் - ஹரி நாடார் என கூறியுள்ளார்.

புழல் சிறையில் இருக்கும் ஹரி நாடார் நீதிபதிக்கு ஆடியோ வெளியிட்டிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Summary

The audio released by Hari Nadar, who is in Puzhal prison, to the judge has gone viral on social media!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.