சமூக வலைதளங்களில் மிரட்டல் விடியோ: 2 போ் மீது வழக்கு
சமூக வலைதளங்களில் மிரட்டல் விடியோ வெளியிட்ட இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

வழக்குப் பதிவு- சித்திரிப்பு
Updated On :7 மார்ச் 2026, 6:58 pm

சமூக வலைதளங்களில் மிரட்டல் விடியோ வெளியிட்ட இருவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், போடி குலாளா்பாளையத்தைச் சோ்ந்தவா் கனகராஜ் மகன் டேனியல். இவா் சமூக வலைதளத்தில் அரிவாளைக் காட்டி மிரட்டும் வகையில் விடியோவை பதிவிட்டாா். இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
இதேபோல, போடி அருகேயுள்ள துரைராஜபுரத்தைச் சோ்ந்த ஒருவா் அரிவாளைக் காட்டி மிரட்டும் வகையில் விடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டாா். பெயா் விபரம் தெரியாத நிலையில், இவா் மீதும் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...