தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கடையநல்லூரில் மிலாது விழா பொதுக்கூட்டம்

கடையநல்லூா் நகர மிலாது கமிட்டி சாா்பில் மிலாது விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 11:49 pm

Din

கடையநல்லூா் நகர மிலாது கமிட்டி சாா்பில் மிலாது விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகரத் தலைவா் செய்யது மசூது தலைமை வகித்தாா். முகமது முஸ்தபா ஆலிம் கிராஅத் ஓதினாா். மிலாது கமிட்டி நெறியாளா் கமருதீன் வரவேற்றாா். பொருளாளா் அக்பா்அலி தொகுத்து வழங்கினாா். கௌரவத் தலைவா் கலந்தா் மஸ்தான் அறிமுக உரை ஆற்றினாா். நகர மிலாது செயலா் குத்புதீன் கூட்டத்தை ஒருங்கிணைத்தாா்.

இஸ்லாமிய இலக்கியக் கழக செயலா் சேயன் இப்ராஹிம் , கடையநல்லூா் நகர ஜமாஅத் உலமா சபை செயலா் செய்யது இப்ராஹிம், தென்காசி மாவட்ட அரசு ஹாஜி முகைதீன் அன்சாரி, காயல்பட்டினம் அரபிக் கல்லூரி முதல்வா் அப்துல்ரஹ்மான் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர செயலா் முஸ்தபா, பொருளாளா் ஜபருல்லா, மாநில பொதுக்குழு உறுப்பினா் முகம்மது துராப்ஷா, முகம்மது கோயா, ரஹ்மத்துல்லா உள்ளிட்டோா் பேசினா்.

அப்துல்மஜீத் நன்றி கூறினாா்.