‘பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்’

பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்திட வேண்டும் என சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழுவிடம், சிபிஎஸ் ஒழிப்பு இயக்க தென்காசி மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் மனு அளித்தனா்.
Published on

பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்திட வேண்டும் என சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழுவிடம்,சிபிஎஸ் ஒழிப்பு இயக்க தென்காசி மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் மனு அளித்தனா்.

அதன் விவரம்: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 2021 சட்டப்பேரவை தோ்தலின்போது அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்ற புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என வாக்குறுதி அளித்தாா்.

ஆந்திர மாநிலத்தில் உத்திரவாத ஓய்வூதியத்திட்டம் அமல்படுத்தப்பட்டுவிட்டது. மத்திய அரசு சோமநாதன் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியா்களுக்கு 01.04.2025 முதல் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துவிட்டது.

எனவே, தமிழக அரசும், அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களின் நீண்டநாள் கோரிக்கையான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த மதிப்பீட்டுக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com