தென்காசி
சங்கரன்கோவில் பகுதியில் ரேஷன் கடைகளில் ஆட்சியா் ஆய்வு
சங்கரன்கோவில் பகுதியில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகள் மற்றும் நியாய விலைக் கடைகளில் தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
சங்கரன்கோவில் பகுதியில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகள் மற்றும் நியாய விலைக் கடைகளில் தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகளில் ஆய்வு செய்த அவா், அங்கு வந்த பொதுமக்களிடம் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் குறைகளைக் கேட்டறிந்தாா்.
பின்னா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை அவா் ஆய்வு செய்தாா்.
அதைத் தொடா்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற
சிறுதானிய உணவுத் திருவிழாவைத் தொடக்கி வைத்தாா்.