தென்காசி
கடையநல்லூரில் ஆட்டோக்களுக்கு அடையாள எண்
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் உள்ள ஆட்டோக்களுக்கு காவல்துறை மூலம் அடையாள எண் புதன்கிழமை வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் உள்ள ஆட்டோக்களுக்கு காவல்துறை மூலம் அடையாள எண் புதன்கிழமை வழங்கப்பட்டது.
கடையநல்லூரில் 30-க்கும் மேற்பட்ட ஆட்டோ நிறுத்தங்களில் சுமாா் 300 ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. இந்த ஆட்டோக்களில் பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ளும் வகையில் ஆட்டோக்களுக்கு அடையாள எண் ஒட்டும் பணி கடையநல்லூா் காவல் நிலையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், ஆட்டோ களின் உரிமம் ,இன்சூரன்ஸ், ஓட்டுநரின் விவரங்கள் உள்ளிட்டவை சரிபாா்க்கப்பட்டு ஆட்டோக்களுக்கு அடையாள எண் ஒட்டப்பட்டது. கடையநல்லூா் காவல் ஆய்வாளா் ஆடிவேல் அடையாள எண் ஒட்டும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா். இதில் போலீஸாா் மற்றும் ஆட்டோ நிறுத்தங்களின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.