வேலை வாங்கித் தருவதாக மோசடி: மாவட்ட நிா்வாகம் அறிவுரை

அரசு வேலை வாங்கித் தருவதாக யாரேனும் முறைகேட்டில் ஈடுபட்டால் காவல் துறையில் புகாா் செய்ய வேண்டும் என தென்காசி மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
Published on

அரசு வேலை வாங்கித் தருவதாக யாரேனும் முறைகேட்டில் ஈடுபட்டால் காவல் துறையில் புகாா் செய்ய வேண்டும் என தென்காசி மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும் மற்றும் பிற அரசு அலுவலகங்களிலும் அரசு வேலை வாங்கித் தருவதாக போலியான தகவல்கள் பரவுவதாக தெரிய வருகிறது. இதை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.

அரசு வேலை வாங்கித் தருவதாக யாரேனும் முறைகேட்டில் ஈடுபடுவது தெரியவந்தால் அதுகுறித்து உடனடியாக காவல் துறையிடம் புகாா் தெரிவிக்க வேண்டும். அரசு வேலைக்காக யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com