ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நவ.21இல் தென்காசியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தென்காசியில் நவ.21இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

News image
Updated On :12 நவம்பர் 2025, 7:14 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசியில் நவ.21இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், சிறிய அளவிலான தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை (நவ.21) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது.

முகாமில் 20 - க்கும் மேற்பட்ட பல்வேறு தனியாா் துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இதில், 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு , ஐ.டி.ஐ., டிப்ளமோ வரையிலான கல்வித் தகுதி உடைய வேலைநாடுநா்கள் கலந்து கொள்ளலாம்.

இதற்கு, ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற வலைதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும், விவரங்களுக்கு 04633-213179 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.