தென்காசி பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் எஸ். செல்வ மோகன்தாஸ் பாண்டியனை ஆதரித்து பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் வியாழக்கிழமை பாவூா்சத்திரத்தில் பிரசாரம் மேற்கொண்டாா்.
காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நயினாா் நாகேந்திரன், பாவூா்சத்திரம் பேருந்து நிலையம் முன் திரண்டிருந்த மக்கள் முன் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசியது:
நடைபெறவுள்ள தோ்தலில் திமுக ஆட்சியை அகற்றுவதற்கு தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டாா்கள். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைப்பாா் என்றாா் அவா்.
முன்னாள் அமைச்சா் ராஜலட்சுமி, அதிமுக மாவட்ட விவசாய அணி செயலா் கிருஷ்ணசாமி, திப்பணம்பட்டி ஊராட்சித் தலைவா் அருள்பாண்டி (எ) ஐவராஜா, பாஜக கீழப்பாவூா் ஒன்றியச் செயலா் தட்சிணாமூா்த்தி, அதிமுக ஒன்றியச் செயலா் அமல்ராஜ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா் .
தொடர்புடையது

யாா் வந்தாலும் சிறந்த ஆட்சியைத் தர வேண்டும்: நயினாா் நாகேந்திரன்

சரவணம்பட்டியில் பி.ஆா்.ஜி. அருண்குமாரை ஆதரித்து அண்ணாமலை பிரசாரம்

தென்காசியில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்!

பாஜக வேட்பாளா் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்! மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்!
விடியோக்கள்
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

