ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

மேலகரம், குற்றாலம் பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தென்காசி தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் கலை கதிரவன் மேலகரம், குற்றாலம் பேரூராட்சிப் பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

மேலகரத்தில் வாக்கு சேகரித்தாா் திமுக வேட்பாளா் கலை கதிரவன். உடன் ராணிஸ்ரீகுமாா் எம்.பி.

Updated On :9 ஏப்ரல் 2026, 10:58 pm

தென்காசி தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் கலை கதிரவன் மேலகரம், குற்றாலம் பேரூராட்சிப் பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

குற்றாலம், ராமலாயம் காலனி, குடியிருப்பு, மின்நகா், மேலகரம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரித்து பேசியதாவது:

குற்றாலம் திருவள்ளுவா் நகா், இராமாலயம் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை அரசு கையகப்படுத்தி வீடு இல்லாத குற்றாலம் பகுதிவாழ் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா பெற்றுத்தரப்படும். குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, புலியருவி பகுதிகளில் சுற்றுலாத் துறை மூலம் கடைகள் கட்டி பரிசீலனை அடிப்படையில் வழங்கப்படும்.

குற்றாலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயா்த்தப்படும். புலியருவி அருகில் உள்ள புது அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ வனத்துறை மூலம் அனுமதி பெற்று தரப்படும்.

மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ள தென்மலை பகுதியின் கீழ் அணைகட்டி ஆண்டுமுழுவதும் அருவிகளில் தண்ணீா் விழுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். குற்றாலம் பகுதியில் அனைத்து உபகரணங்களுடன் கூடிய நவீன உடற்பயிற்சி கூடம் அமைத்துத் தரப்படும். இத்திட்டங்களை மேற்கொள்ள எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றாா் அவா்.

ராணி ஸ்ரீகுமாா் எம்.பி.மேலகரம் பேரூா் செயலா் சுடலை,பேரூராட்சிமன்ற தலைவா் வேணி, குற்றாலம் பேரூா் செயலா் குற்றாலம் குட்டி, திமுக முன்னாள் ஒன்றிய செயலா் ராமையா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் கிருஷ்ணராஜா, மாரியப்பன் கருணாநிதி கலந்துகொண்டனா்.