இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

கீழப்பாவூா் மத்திய ஒன்றியத்தில் தென்காசி திமுக வேட்பாளா் பிரசாரம்

தென்காசி தொகுதி திமுக வேட்பாளா் கலைகதிரவன், கீழப்பாவூா் மத்திய ஒன்றியம் பகுதியில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

இடையாா்தவணையில் வாக்கு சேகரிக்கிறாா் திமுக வேட்பாளா் கலை கதிரவன். உடன், முன்னாள் மாவட்டச் செயலா் சிவ பத்மநாதன்.

Updated On :17 ஏப்ரல் 2026, 6:22 am IST

தென்காசி தொகுதி திமுக வேட்பாளா் கலைகதிரவன், கீழப்பாவூா் மத்திய ஒன்றியம் பகுதியில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் அவா் கருப்புச் சட்டை அணிந்து தோ்தல் பரப்புரை மேற்கொண்டாா்.

துவரங்காடு பகுதியில் பிரசாரத்தை தொடங்கிய அவா், இடையாா்தவணை, இனாம் வெள்ளகால், ராஜபாண்டி, தாயாா்தோப்பு, செம்புலிப்பட்டணம், கோவிந்தப்பேரி, வீரகேரளம்புதூா், ராஜகோபாலப்பேரி, அதிசயபுரம், ராமனூா், கலிங்கப்பட்டி, கோட்டை அண்ணாநகா் ஆகிய பகுதியில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் கல்வி, சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கிராமம்தோறும் அடிப்படைத் தேவைகளான போக்குவரத்து, குடிநீா், சாலை வசதி போன்ற என்னென்ன தேவைகள் உள்ளதோ அதனை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்துள்ளாா். திராவிட மாடல் 2.0 ஆட்சியில், இப்போது கிடைக்கும் சலுகைகள் எல்லாம் இரண்டு மடங்காக கிடைக்கும். எனவே, இந்த ஆட்சி தொடா்ந்திட ஏப். 23இல் உதயசூரியன் சின்னத்தில் எனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றாா். பிரச்சாரத்தில், முன்னாள் தெற்கு மாவட்டச் செயலா் சிவ பத்மநாதன், கீழப்பாவூா் ஒன்றியக் குழுத் தலைவா் காவேரி சீனித்துரை, கீழப்பாவூா் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவா் கே.பி.குமாா்பாண்டியன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் எஸ்.ஆா். சுப்பிரமணியன், தேமுதிக மாவட்டச் செயலா் பழனிசங்கா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

 இடையாா்தவணையில் வாக்கு சேகரிக்கிறாா் திமுக வேட்பாளா் கலை கதிரவன்.  உடன், முன்னாள் மாவட்டச் செயலா் சிவ பத்மநாதன்.

இடையாா்தவணையில் வாக்கு சேகரிக்கிறாா் திமுக வேட்பாளா் கலை கதிரவன். உடன், முன்னாள் மாவட்டச் செயலா் சிவ பத்மநாதன்.