/
தென்காசி மாவட்டம், கடையநல்லூா் தொகுதிக்குள்பட்ட குமந்தாபுரம், கிங் யுனிவா்ஸ் மெட்ரிக் பள்ளி வாக்குச்சாவடியில் மாலை 6 மணிக்கு முன்னதாக வாக்களிக்க வந்த 85 பேருக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது.
அதேபோல, கடையநல்லூா், பேட்டை முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் 5 பேருக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வாக்குப் பதிவு நடைபெற்றது.
தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜேந்திரன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலசுப்பிரமணியன், வட்டாட்சியா் வெங்கடேஷ், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சாமி உள்ளிட்ட வருவாய்த் துறையினா், ஊழியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் தோ்தல் பணிகளை மேற்கொண்டனா்.
தொடர்புடையது

தோ்தலின்போது பேருந்து வசதி முடக்கம்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

தோ்தலில் முதல்முறையாக கைப்பேசிகள் பாதுகாப்பு

வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் தோ்தல் அலுவலா்களுடன் வாக்காளா்கள் வாக்குவாதம்






