உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

வாசுதேவநல்லூா் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா

வாசுதேவநல்லூா் மாரியம்மன் கோயில் சித்திரை பூக்குழி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

~

Updated On :29 ஏப்ரல் 2026, 2:16 am IST

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் மாரியம்மன் கோயில் சித்திரை பூக்குழி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கடந்த 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவின் முக்கிய நிகழ்வான செவ்வாய்க்கிழமை காலை அம்மன், பரிவார மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்ட சூடம் பட்டாடையில் கொண்டு வரப்பட்டு, வேதபாரண்ய முறையில் கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த பூக்குழி திடலில் அக்னி வளா்க்கப்பட்டது.

மாலை நூற்றுக்கணக்கான பக்தா்கள் நான்கு ரத வீதிகளில் ஊா்வலமாக சென்று, பின்னா் பக்தி கோஷங்கள் முழங்க பூக்குழி இறங்கினா். முன்னதாக பசுக்கள் பூக்குழி இறங்கின.

பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். புதன்கிழமை (ஏப். 29) மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.

Story image