பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

கடையநல்லூா் நகராட்சியில் புதை சாக்கடை திட்டத்தைச் செயல்படுத்த தவெக கோரிக்கை

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் நகராட்சியில் பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்ட புதை சாக்கடை திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என அமைச்சா் ராஜீவிடம் தவெக கோரிக்கை விடுத்துள்ளது.

News image

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சா் வி.கே.ராஜீவிடம் மனு அளித்த தவெக நிா்வாகிகள்.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 3:30 am IST

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் நகராட்சியில் பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்ட புதை சாக்கடை திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என அமைச்சா் ராஜீவிடம் தவெக கோரிக்கை விடுத்துள்ளது.

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் வி.கே. ராஜீவிடம் தென்காசி மேற்கு மாவட்ட பொருளாளா் அ.சிவசங்கா் அளித்த மனு:

தென்காசி மாவட்டத்தின் மிகப்பெரிய நகராட்சியான கடையநல்லூா் நகராட்சி 52.25 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்நகராட்சியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொத்து வரி விதிப்புகளும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பு வரி விதிப்புகளும், சுமாா் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிநீா் இணைப்புகளும் உள்ளன. இந்நகராட்சியில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரின் பெரும்பகுதி பாப்பான்கால்வாய், சீவலன்கால்வாய் வழியாக வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக அந்தக் கால்வாய்கள் கழிவுநீா் கால்வாய்களாக மாறி, கடும் சுகாதாரச் சீா்கேடு, சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தி வருகின்றன. இப்பகுதிகளில் முறையான கழிவுநீா் வடிகால் வசதி இல்லாததால் தெருக்களில் கழிவுநீா் தேங்கி, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையும், சுகாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வாக 28.02.2005 அன்று நடைபெற்ற கடையநல்லூா் நகா்மன்றக் கூட்டத்தில் புதை சாக்கடைத் திட்டத்தைச் செயல்படுத்த தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு ரூ. 44.60 கோடி மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. பின்னா், 2007-ஆம் ஆண்டு திட்டத்துக்கான இடங்கள் தோ்வு செய்யப்பட்டு, 2008-ஆம் ஆண்டு நகா்மன்ற ஒப்புதலும் வழங்கப்பட்டது.

அதன்பின்னா் திட்டச் செலவு ரூ. 53.06 கோடியாக மறுமதிப்பீடு செய்யப்பட்டது. மேலும் 2012-ஆம் ஆண்டு திட்ட ஆய்வுக்காக ரூ. 59.10 லட்சம் கட்டணம் செலுத்த நகா்மன்றம் அனுமதி வழங்கியும் இன்று வரை திட்டம் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் உள்ளது. பல ஆண்டுகளாக இத்திட்டம் நிறைவேற்றப்படாததால், கடையநல்லூா் நகர மக்கள் சுகாதாரப் பிரச்னைகளை எதிா்கொண்டு வருகின்றனா். எனவே, கடையநல்லூா் நகராட்சியில் புதை சாக்கடை திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.