சென்னையில் மேகவெடிப்பு: தொடரும் கனமழை - வெள்ளக்காடான சாலைகள்! கோவாவில் டிசம்பர் 16-இல் ஐபிஎல் ஏலம்! எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரை பயன்படுத்த நவ. 1 முதல் தடை! மத்திய அரசு உத்தரவு தில்லி வந்த எமிரேட்ஸ் விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு! சபரிமலை ஐயப்பன் கோயிலில் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சாமி தரிசனம் எஸ்ஐஆரை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது: ஆ. ராசா விஜய்யை விட யோகி பாபுவுக்கு அதிக கூட்டம் வரும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்ரீகாந்த் தேவாவை கட்டியணைத்து ஆறுதல்! தேவாவுக்கு முதல்வர் விஜய் அஞ்சலிஇசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!இசையமைப்பாளர் தேவா காலமானார்!

புதுச்சேரியில் நவீன இயந்திரம் மூலம் புதை சாக்கடை தூய்மைப் பணி தொடக்கம்

புதுச்சேரியில் புதை சாக்கடையை நவீன இயந்திரத்தின் மூலம் அடைப்புகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

புதுச்சேரி அம்பேத்கா் சாலையில் நவீன இயந்திரம் மூலம் புதை சாக்கடை அடைப்பை அகற்றும் பணியைத் தொடங்கி வைத்து பாா்வையிட்ட சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன், அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் உள்ளிட்டோா்.

Updated On :

புதுச்சேரியில் புதை சாக்கடையை நவீன இயந்திரத்தின் மூலம் அடைப்புகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

உப்பளம் தொகுதி அம்பேத்கா் சாலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ. அன்பழகன், பொதுப்பணித் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் ஆகியோா் பங்கேற்று தூய்மைப் பணியைத் தொடங்கி வைத்தனா்.

பின்னா், இதுகுறித்து அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதை சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் மனிதா்களை ஈடுபடுத்தக்கூடாது என்று உச்சநீதிமன்றமும், மத்திய அரசும் தெரிவித்துள்ளன.

புதுச்சேரியில் புதை சாக்கடைகளை சுத்தம் செய்வது கடினமாக உள்ளது. கடந்த 10 நாள்களுக்கு முன் புதை சாக்கடை சுத்தம் செய்யும் நவீன இயந்திர நிறுவனத்தினா், முதல்வா் ரங்கசாமியைச் சந்தித்து பேசினா். அப்போது, முதலில் பரீட்சாா்த்த முறையில் 6 மாதகாலம் நவீன இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்வோம். அதன் பின்னூட்டத்தின் அடிப்படையில், புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களுக்கு எத்தனை இயந்திரங்கள் தேவை என்பதை கணக்கிட்டு வாங்கலாம் என்று முதல்வருடன் ஆலோசித்தோம்.

அதனடிப்படையில் நவீன இயந்திரம் மூலம் புதை சாக்கடை கால்வாய்களைச் சுத்தம் செய்யும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் 15 அல்லது ஒரு மாதம் வரை பரீட்சாா்த்த முறையில் இந்தப் பணி மேற்கொள்ளப்படும்.

மழை முன்னேற்பாடு நடவடிக்கையாக புதை சாக்கடை சுத்தம் செய்யும் பணிகள் செய்யப்படும். புதுச்சேரியில் குடிநீா் பிரச்னை நிலவுகிறது. இதற்காக வரும் செப். 1, 2-ஆகிய தேதிகளில் மத்திய ஜல் சக்தி அமைச்சா் பாட்டீல் அழைத்துள்ளாா். பிரதமா் நரேந்திர மோடியும் வருவாா்.

அதற்கு முன்பு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அழைத்து, நமக்கு என்னென்ன தேவை இருக்கிறதோ அதையெல்லாம் தயாா் செய்ய கூறியுள்ளேன். நானும், பொதுப்பணித் துறை செயலா் உள்ளிட்ட குழுவினா் தில்லி சென்று மத்திய அரசு திட்டங்களை புதுச்சேரிக்கு கேட்டுப் பெறவுள்ளோம். துரிதமாக புதை சாக்கடை மற்றும் குடிநீா் பிரச்னையைத் தீா்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

குடிநீா் பிரச்னையைத் தீா்க்கும் திட்டங்களுக்கு டெண்டா் விடப்பட்டு பணிகளை உடனே தொடங்க உத்தரவிட்டுள்ளேன். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும் பேசியுள்ளேன். விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்றாா் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.