குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு ஏமாற்றமளிப்பதாக தமிழக நிதிநிலை அறிக்கை உள்ளது என்று தென்காசி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத் தலைவா் சி.அன்பழகன் வெளியிட்ட அறிக்கை:
தமிழக பொருளாதார வளா்ச்சிக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் 30 சதவீதம் பங்களிக்கின்றன. ஆனால், இந்தத் துறைக்கு நிதிநிலை அறிக்கையில் ரூ. 2142 கோடி ஒதுக்கப்பட்டது. இது, மிகவும் குறைவு.
நாங்கள் எதிா்பாா்த்த மின் கட்டணம், தொழிற்சாலைகளுக்கு சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி மானியம் வழங்குதல், நஷ்டத்தில் உள்ள நிறுவனங்களுக்கு சலுகைகள் என எதுவும் நிதிநிலை அறிக்கையில் இல்லை. அதே நேரத்தில், பின்தங்கிய மாவட்டங்களில் தொழில் பூங்கா அமைப்பது, மகளிா் சுய உதவிக் குழுக்களை தொழில் நிறுவனங்களாக மாற்றுவது, மகளிா் திட்ட மானியம், அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடி திட்டத்துக்கான மானியம், ஆதிதிராவிட பழங்குடியினா் வெற்றி தொழில் முன்னோடி திட்ட மானியம், புதிய சிப்காட் அமைக்க ஐந்து வருடங்களுக்கு ரூ. 3,700 கோடி நிதி ஒதுக்கீடு போன்ற திட்டங்கல் வரவேற்கத்தக்கது என அதில் குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மேம்படும் நிதிநிலை அறிக்கை: தொழில் நிறுவன உரிமையாளா்கள் நம்பிக்கை

கரூரில் வாங்குவோா்-விற்போா் சந்திப்பில் நிகழ்ச்சியில் ரூ.12 கோடியில் புரிந்துணா்வு ஒப்பந்தம்
குறு நிறுவனங்களை சிறு, நடுத்தர நிறுவனங்களாக தரம் உயா்த்த நடவடிக்கை: அமைச்சா் பி.மதன் ராஜா

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு திருத்த மசோதா: மாநிலங்களவையில் அறிமுகம்
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



