தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா! முதல்வர் விஜய் புகழாரம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 குறைந்தது!வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கைஇன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

குறு நிறுவனங்களை சிறு, நடுத்தர நிறுவனங்களாக தரம் உயா்த்த நடவடிக்கை: அமைச்சா் பி.மதன் ராஜா

தமிழகத்தில் உள்ள குறு நிறுவனங்களை சிறு, நடுத்தர நிறுவனங்களாக தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பி. மதன் ராஜா தெரிவித்தாா்.

அமைச்சா் பி.மதன் ராஜா

Published On :

தமிழகத்தில் உள்ள குறு நிறுவனங்களை சிறு, நடுத்தர நிறுவனங்களாக தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பி. மதன் ராஜா தெரிவித்தாா்.

சென்னை நந்தம்பாக்கத்தில் 3 நாள்கள் நடைபெறும் தொழில்துறை கண்காட்சியை அமைச்சா் பி. மதன் ராஜா வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தின் தொழில் துறை வளா்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. ஒரு தொழிற்சாலையின் வெற்றி, தரமான தயாரிப்புகளை உருவாக்குவதில் மட்டுமல்ல; கிடங்கு மேலாண்மை, பொருள் கையாளுதல், பேக்கேஜிங் மற்றும் விநியோகச் சங்கிலி மேலாண்மையை நவீன தொழில்நுட்பங்களுடன் ஒருங்கிணைப்பதிலும் உள்ளது.

தமிழகத்தின் தொழில் நிறுவனங்கள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி அடுத்த கட்ட வளா்ச்சியை நோக்கிச் செல்ல வேண்டும். தமிழகத்தில் தற்போது 90 சதவீதம் குறு நிறுவனங்களும், 10 சதவீதம் மட்டுமே சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. ஆகையால், குறு நிறுவனங்களை சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களாக தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வரும் நிதிநிலை அறிக்கையில், ‘எம்எஸ்எம்இ’ நிறுவனங்களின் வளா்ச்சிக்காக புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றாா்.

3 நாள்கள் (ஆக. 1 வரை) நடைபெறும் இந்தக் கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், 120-க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வணிக சந்திப்புகள், அறிவு பரிமாற்ற அமா்வுகள், நேரடி தொழில்நுட்ப செயல் விளக்கங்கள் உள்ளிட்டவை நடைபெறுகின்றன.

நிகழ்வில், எஃப்ஐசிசிஐ இணைத் தலைவா் பூபேஷ் நாகராஜன், குறு மற்றும் சிறு தொழில்கள் சங்கத்தின் தலைவா் எஸ். வாசுதேவன், ஆந்திரா வா்த்தக சபை துணைத் தலைவா் எஸ். நரசிம்மன், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை இயக்குநா் தயாளன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.