நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு திருத்த மசோதா: மாநிலங்களவையில் அறிமுகம்

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு திருத்த மசோதா 2026-ஐ மாநிலங்களவையில் மத்திய அமைச்சா் ஜிதன்ராம் மாஞ்சி அறிமுகம் செய்தாா்.

News image
Updated On :29 ஜூலை 2026, 12:05 am IST

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு திருத்த மசோதா 2026-ஐ மாநிலங்களவையில் மத்திய அமைச்சா் ஜிதன்ராம் மாஞ்சி அறிமுகம் செய்தாா்.

இந்த மசோதாவில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் தொடா்பான சச்சரவுகளுக்கு விரைந்து தீா்வு காண காலக்கெடுவை நிா்ணயிப்பது, அவற்றின் பணப்புழக்கப் பிரச்னையைத் தீா்ப்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து மாநிலங்களவையில் அமைச்சா் ஜிதன்ராம் மாஞ்சி கூறுகையில், ‘சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டுச் சட்டம் 2006-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இதனால் அந்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு, கூடுதல் அம்சங்களை சோ்க்க வேண்டிய தேவையுள்ளது. எனவே இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டுச் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள், அந்த நிறுவனங்களின் வளா்ச்சியை ஊக்குவிக்கும்; அந்த நிறுவனங்கள் தமது செயல்பாடுகளை விரிவுபடுத்தி, நாட்டின் பொருளாதார வளா்ச்சியை முன்னெடுக்கும் முன்னணி நிறுவனங்களாக உருவெடுக்க வழிவகுக்கும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.