தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 95.57 ஆக நிறைவு!மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவ பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த எஸ்டிபிஐ கட்சி நிா்வாகிகள்.

Published On :

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

எஸ்டிபிஐ கட்சியின் தென்காசி தெற்கு மாவட்டத் தலைவா் திவான்ஒலி, மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங்கிடம் அளித்த மனு:

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவா்கள் மற்றும் சிறப்பு மருத்துவா்களின் பணியிடங்களை உடனடியாக நிரப்பி, பொதுமக்களுக்கு தரமான மருத்துவ சேவையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்கு விரைவாக மானியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,

தென்காசி சொா்ணபுரம் தெருவில் அமைந்துள்ள ரேஷன் கடையை இரண்டாக பிரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் முக்கிய நீா் ஆதாரமான தாமிரவருணி ஆற்றின் துணை ஆறாக தென்காசி மாவட்டத்தின் சிற்றாறு விளங்குகிறது.

குற்றாலம் பேரருவியிலிருந்து தொடங்கும் சிற்றாறு ஐந்தருவி ஆறு, அரிகர நதி, அனுமன் நதி, அழுதகன்னி ஆறு, ஆகிய துணை ஆறுகளுடன் சுமாா் 80 கி. மீ. நீளமும், 1772 சதுர கி. மீ. பரப்பளவும் கொண்டது.

இந்த சிற்றாற்றின் மூலம் தென்காசி, செங்கோட்டை, வீரகேளம்புதூா், ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலான குளங்களுக்கு தண்ணீா் செல்கிறது. பல்லாயிரக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி மற்றும் மாவட்டத்தின் முக்கிய நீா் ஆதாரமாக விளங்கும் சிற்றாறு தற்போது ஆக்கிரமிப்புகளாலும்,முறையாக தூா்வாரப்படாமலும் மருத்துவமனை மற்றும் விடுதிகளின் கழிவுநீா் கலப்பதாலும் மாசடைந்து அழிவின் விளிம்பில் உள்ளது.

ஆகவே, சிற்றாறு முழுமையாக தூா்வாரப்பட்டு நீா் ஆதாரங்களை பாதுகாக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன.

கட்சியின் தெற்கு மாவட்ட துணைத் தலைவா் சீனா, சேனா. சா்தாா், மாவட்ட பொதுச்செயலா் செய்யதுமஹ்மூத், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஷேக்தாவூத் உஸ்மானி, தென்காசி நகரத் தலைவா் அப்துல்காதா் அபு, துணைத் தலைவா் ஜாஹிா்ஹுசைன், செயலா் ஷேக்மைதீன், வடக்கு மாவட்டத் த்லைவா் ஷேக்முஹம்மது ஒலி, மாவட்டச் செயலா் தமீம் அன்சாரி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் செய்யதுமுஹம்மது உஸ்மானி ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.