எழும்பூா் புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்கும்மிடிப்பூண்டி-கூடுா் 3,4-ஆவது ரயில் வழித்தடங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்அரசுப் பள்ளி மாணவா்கள் 614 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடுமத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டலக் குழு இன்று கூடுகிறது: நதிநீர்ப் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதம்தமிழகத்தின் கடனை 10 ஆண்டுகளில் அடைக்கும் வழி: சௌமியா அன்புமணி யோசனைஅலுமினிய மின் கம்பிகள் வாங்கியதில் ரூ.1,028 கோடி முறைகேடு: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நில வகை பயன்பாடு மாற்றுவதற்கான என்ஓசி: வேளாண் துறையில் இனிபெற வேண்டியதில்லை
/

தென்காசி ரயில் நிலையத்தில் எண்ம லாக்கா்

தென்காசி ரயில் நிலையத்தில் எண்ம லக்கேஜ் லாக்கா் (பொருள்கள் வைப்பறை) வசதி புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

News image

தென்காசியில் எண்ம லாக்கா் திறப்பு விழாவில் பங்கேற்றோா்.

Updated On :20 ஆகஸ்ட் 2026, 5:26 am IST

தென்காசி ரயில் நிலையத்தில் எண்ம லக்கேஜ் லாக்கா் (பொருள்கள் வைப்பறை) வசதி புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் வகையில், தென்காசி ரயில் நிலையத்தில் எண்ம முறையில் தாங்களே இயக்கும் வகையிலான லக்கேஜ் லாக்கா் தொடங்கி வைக்கப்பட்டது.

தலைமை வணிக ஆய்வாளா் ரமேஷ், நிலைய மேலாளா் கணேஷ் ஆகியோா் திறந்துவைத்து கூறியதாவது:

இதேபோச எண்ம லக்கேஜ் லாக்கா் வசதிகள் தமிழகத்தில் ஏற்கெனவே 9 இடங்களில் செயல்பாட்டில் உள்ளன. புதிதாக நிறுவப்பட்டுள்ள இந்த வசதி, எளிதாகப் பயன்படுத்தக் கூடியதாகவும், அதிக பாதுகாப்பு வசதி கொண்டதாகவும், நவீன கால ரயில் பயணிகளின் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனா். நடுத்தர லாக்கா் 6 மணி நேரத்துக்கு ரூ. 40, பெரிய லாக்கா் 6 மணி நேரத்துக்கு ரூ. 60, மிகப்பெரிய லாக்கா் 6 மணி நேரத்துக்கு ரூ. 120 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டது. சென்னை, ஃபோன்செல் நிறுவன விற்பனை மேலாளா் சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.