டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!டிசம்பருக்குள் 5ஜி சேவைக்கு மாறும் பி.எஸ்.என்.எல்.!இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

அடுத்த 2 மணி நேரத்துக்கு 17 மாவட்டங்களில் மழை!

இரவு 7 மணி வரை 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.

News image

மழை (கோப்புப்படம்) - DIN

Updated On :19 ஆகஸ்ட் 2026, 5:10 pm IST

அடுத்த 2 மணி நேரத்துக்கு 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.

இதன்காரணமாக, இன்று (ஆகஸ்ட் 19) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.

திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, சேலம், ஈரோடு, நாமக்கல் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்திருந்து இருந்தது.

இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்துக்கு(இரவு 7 மணி வரை) ராணிப்பேட்டை, வேலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவை, ஈரோடு, நீலகிரி, புதுக்கோட்டை, சிவகங்கை, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The Chennai Regional Meteorological Centre has stated that there is a possibility of rain in 16 districts over the next two hours.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.